உலகம்

அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வொட்சன் காலமானார்!

Published

on

அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வொட்சன் காலமானார்!

டின்எ கட்டமைப்பைக் கண்டறிவதில் முன்னோடியாகத் திகழ்ந்த அமெரிக்க விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வொட்சன் (James Watson) 97 வயதில் காலமானார். 

20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படும்  டின்எ இன் இரட்டைச் சுருள் வடிவத்தை அவர் பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் கிரிக் உடன் இணைந்து 1953 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். 

Advertisement

அவர்கள் இருவரின் இந்தக் கண்டுபிடிப்பு மூலக்கூறு உயிரியலின் அதிவேக வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அடித்தளமாக அமைந்தது. இதன் காரணமாக, அவர்கள் இருவரும் 1962 ஆம் ஆண்டில் நோபல் பரிசை வென்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version