தொழில்நுட்பம்

அரிசி விட சிறிய வயர்லெஸ் மூளை சிப் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் புதிய சாதனை!

Published

on

அரிசி விட சிறிய வயர்லெஸ் மூளை சிப் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் புதிய சாதனை!

நரம்பியல் தொழில்நுட்பத்தின் (neurotechnology) எதிர்காலத்தையே தலைகீழாக மாற்றக்கூடிய பிரம்மிப்பூட்டும் கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். அது, அரிசி மணியை விடச் சிறிய ஒரு அதிநவீன மூளை உட்பொருத்தும் கருவி (Brain Implant)!’MOTE’ (மைக்ரோஸ்கேல் ஆப்டோஎலக்ட்ரானிக் டெதர்லெஸ் எலக்ட்ரோடு) என்றழைக்கப்படும் இந்த சாதனம், தற்போதுள்ள எந்த ஒரு மூளை கருவியை விடவும் மிகச்சிறியது. இதன்மூலம், மூளையின் மர்மங்களை மட்டுமல்ல, உடலின் மற்ற நுட்பமான பாகங்களின் செயல்பாடுகளையும் நம்மால் கண்டறிய முடியும். இது, மூளையின் மின் செயல்பாடுகளை அளந்து, அதை வயர்லெஸ் முறையில் கடத்தக்கூடிய உலகின் மிகச்சிறிய நரம்பியல் இம்ப்லாண்ட் ஆகும். இதன் அளவைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்! சுமார் 300 மைக்ரான் நீளம், 70 மைக்ரான் அகலம்… அதாவது, ஒரு மனித முடியின் அகலத்தில்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஇந்த மைக்ரோ-சாதனம், மூளையில் உருவாகும் நரம்பியல் சமிக்ஞைகளை (Neural Signals) அகச்சிவப்பு ஒளித் துடிப்புகளாக (Infrared Light) மாற்றி, நமது மூளைத் திசு மற்றும் மண்டை ஓடு வழியாக ஊடுருவி, வெளியே உள்ள ரிசீவருக்குத் தகவலை அனுப்புகிறது! 2001-ல் உருவான இந்த யோசனை, 20 ஆண்டுகால உழைப்புக்குப் பிறகு இப்போது நிஜமாகியுள்ளது.அலுமினியம் காலியம் ஆர்சனைடு என்ற சிறப்பு செமிகண்டக்டரால் உருவாக்கப்பட்ட இந்த MOTE, 2 அற்புத வேலைகளைச் செய்கிறது. தகவலை அனுப்ப அகச்சிவப்பு ஒளியை வெளியிடுகிறது. இயங்குவதற்குத் தேவையான சக்தியை ஒளியிலிருந்தே பெற்றுக்கொள்கிறது. தற்போது நாம் பயன்படுத்தும் மூளை உள்வைப்புகளில் உள்ள பல சிக்கல்களை MOTE தீர்த்து வைக்கிறது:பழைய இம்ப்லாண்ட்கள் உலோகத்தால் ஆனதால், MRI ஸ்கேன் அறைகளுக்குள் செல்ல முடியாது. ஆனால் MOTE, MRI ஸ்கேன்களுடன் எந்தப் பிரச்னையும் செய்யாத பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான எலக்ட்ரோடுகள் மூளையில் எரிச்சலையும், திசுக்களின் எதிர்ப்பை (Immune Response) தூண்டும். ஆனால் MOTE-ன் வயர்லெஸ் வடிவமைப்பு மற்றும் அதன் அற்புமான சிறிய அளவு, மூளைக்கு எந்தவித இடையூறும் செய்யாமல், எலிகளின் மூளையில் ஒரு வருடத்திற்கும் மேலாக வெற்றிகரமாகச் செயல்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.இந்தச் சாதனையின் வீச்சு மூளையுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. தண்டுவடம் (Spinal Cord) போன்ற உடலின் அதி-நுட்பமான பகுதிகளில் இருந்தும் சிக்னல்களைப் பதிவு செய்ய இது உதவும். எதிர்காலத்தில், செயற்கை மண்டை ஓட்டுத் தகடுகளில்கூட (Synthetic Skull Plates) இதை எளிதாகப் பொருத்த முடியும்.”எங்கள் தொழில்நுட்பம், உடலின் ஆழமான பகுதிகளில் இருந்து வரும் மிக முக்கியமான உடலியல் சிக்னல்களை, எந்த வயர் தொந்தரவும் இல்லாமல், நீண்ட காலத்திற்குக் கண்காணிக்கும் ஒரு புதிய சகாப்தத்தைத் திறந்து வைத்துள்ளது,” என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையுடன் முடிக்கின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version