டி.வி

அரோரா எனக்கு ‘பெஸ்ட் பிரண்ட்’.. ஆனா ஏன் வெளில தப்பா தெரியுது.? புலம்பிய துஷார்

Published

on

அரோரா எனக்கு ‘பெஸ்ட் பிரண்ட்’.. ஆனா ஏன் வெளில தப்பா தெரியுது.? புலம்பிய துஷார்

பிக் பாஸ் நிகழ்ச்சி 9-வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தை கடந்துள்ளது.  இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில்  நான்கு பேர் வெளியேறவே, வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்தார்கள்.  ஆரம்பத்தில் அதிரடியாக உள்ளே நுழைந்தவர்கள், காலப்போக்கில்  அமைதியின் சிகரங்களாக மாறிவிட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 34 வது நாளான நேற்று சனிக்கிழமை எபிசோடில்,  வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக வந்தவர்களை  நகைச்சுவையாக கலாய்த்து இருந்தார் விஜய் சேதுபதி. மேலும் அவர்கள் வந்ததும் ஆரம்பத்தில் நடந்த  பிராங்க் சம்பவம் பற்றி  ஹவுஸ்மேட்ஸின் கருத்துக்களையும் கேட்டார்.  ஆனால்  அவர்களுக்கு இன்னும் அது பிராங்க் என தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த சம்பவம் பற்றி மூவரையும் விளக்கச் சொன்னார் விஜய் சேதுபதி. அதன்படி பிரஜின், கம்ரூதின் மற்றும் பிரவீன் ஆகிய மூவரும் இது வெறும் பிராங்க் தான் என்று விளக்கி, மன்னிப்பும் கேட்டனர்.  அதன் பின்பும் மீண்டும் ஹவுஸ்மேட்ஸிடம் கருத்துக்களை கேட்டார் விஜய் சேதுபதி. எனினும் திவாகர் சாண்ட்ராவிடம், இது பிராங்க் இல்லை.. அதில் சண்டை வந்திருக்கும்.. ஆனால் ஷோக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்பதால் தான் மூன்று பேரையும் கூப்பிட்டு அட்வைஸ் பண்ணி இதை பிராங்க் என்று முடிச்சிருக்காங்க. இது பிராங்க் என்றால் அவங்க உங்களை அழ வைத்திருக்க மாட்டாங்க.. கம்ரூதின் கொஞ்சம் சரி காட்டிக் கொடுத்திருப்பார் என்று கூறினார். இதை கேட்ட விஜய் சேதுபதி, திவாகரிடம் அதை எப்படி நீங்க கண்டுபிடிச்சீங்க என்று கேட்க,  அதற்கு அவர் நகைச்சுவையாக  ‘திவாகருக்கு எல்லாம் தெரியும்.. பிக் பாஸ் எப்போ.. எப்படி.. பேசுவார், நாங்கள் என்ன பண்ணுவோம் என்று எல்லாம் தெரியும்’ என  கூறியிருந்தார். இறுதியில் துஷார் வீட்டை விட்டு வெளியேற போவதாக அறிவித்ததும் அரோரா கண்ணீர் வடித்தார்.  வீட்டை விட்டு வெளியேற முன்பு டான்ஸ் ஒன்றும் போட்டார்  துஷார். இதை பார்த்த ரசிகர்கள் இதனை வீட்டில் இருக்கும்போதே இந்த திறமை எல்லாம் காட்டி இருக்க வேண்டும் என்று  பேசினார்.இந்த நிலையில், விஜய் சேதுபதியுடன்  இறுதியாக மேடையில் நின்று பேசிய துஷார், இந்த வீட்டை மிஸ் செய்வேன் என்று கூறியதோடு, அரோரா தனது பெஸ்ட் பிரண்ட் தான்.. ஆனால் வெளியில் ஏன் அது அப்படி தெரியவில்லை என்று கூற,  உன் வாய்தான் எல்லாத்துக்கும் பிரச்சினையே என்று விஜய் சேதுபதி அவரை அனுப்பி வைத்தார்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version