பொழுதுபோக்கு
அவருக்கு 68 தான், ஆனா இவருக்கு 80 படம்: எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு அதிக பாட்டு எழுதிய வாலி!
அவருக்கு 68 தான், ஆனா இவருக்கு 80 படம்: எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு அதிக பாட்டு எழுதிய வாலி!
தமிழ் திரையுலகில் 50 காலக்கட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி. அன்றைக்கு இவர்கள் இருவரும் இரண்டு துருவங்களாக இருந்தனர். எம்.ஜி.ஆர் சண்டை காட்சிகளில் நடித்து பிரபலமானார். சிவாஜி சென்டிமெண்ட் காட்சிகளில் நடித்து பிரபலமானார். எம்.ஜி.ஆருக்கு இருக்கும் அதே அளவு ரசிகர்கள் பட்டாளம் சிவாஜிக்கும் இருந்தது. போட்டிகள் நிறைந்த சினிமா எந்த நடிகரும் யாரையும் புகழ்ந்து பேசுவதில்லை.ஆனால், எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் அப்படி இல்லை. எம்.ஜி.ஆரை எங்கு பேசினாலும் அண்ணன் என பாசமாக பேசுவார் சிவாஜி. அதேபோல், சிவாஜியை பல மேடைகளிலும் புகழந்து பேசியவர் எம்.ஜி.ஆர். என்னதான் பாசம் இருந்தாலும் அவர்கள் இடையே போட்டிகளும் இருந்தன. எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்களுக்கு கவிஞர் வாலி பல பாடல்களை எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் படத்திற்கு கவிஞர் வாலி பாடல்கள் எழுட்கிறார் என்ற கோபம் சிவாஜிக்கு இருந்துள்ளது. இதனால், சிவாஜியின் படங்களுக்கு பாடல்கள் எழுதுவதற்கு கவிஞர் வாலிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் படங்களை விட சிவாஜி படத்திற்கு தான் கவிஞர் வாலி அதிக பாடல்கள் எழுதியுள்ளார். இது குறித்து நேர்காணலில் கவிஞர் வாலி கூறியதாவது, “எம்.ஜி.ஆர் படத்திற்கு நான் பாடல்கள் எழுதுகிறேன் என்ற கோபம் சிவாஜிக்கு இருந்தது. அதனால், சிவாஜி படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. 1964-ல் சிவாஜி படத்திற்கு பாட்டு எழுந்த என்னை அழைத்தார்கள். ’அன்பு கரங்கள்’ தான் சிவாஜிக்கு நான் பாடல் எழுதிய முதல் படம். எம்.ஜி.ஆருக்கு 60 படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறேன். சிவாஜிக்கு 80 படங்களுக்கு மேல் பாடல் எழுதியிருக்கிறேன். சிவாஜியின் கடைசி படத்திற்கும் நான் தான் பாடல் எழுதினேன். 1996-ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர், கே.பாக்யராஜ் போன்ற இயக்குநர்கள் வந்திருந்தனர். அப்போது பாக்யராஜ், வாலி சார் எனக்கு மட்டுமல்ல என் மகனின் படங்களுக்கும் பாடல்கள் எழுதுவார் என்றார். அப்போது சாந்தனுவிற்கு மூன்று வயது. அதன்பின்னர், சாந்தனு நடித்த ‘சக்கரைகட்டி’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘மருதாணி’ பாடலை நான் எழுதினேன் என்றார்.50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை காவிய கவிதை வரிகளால் ஆட்சி செய்தவர் கவிஞர் வாலி.15,000 -க்கும் அதிகமான பாடல்களை எழுதிய வாலிக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் துவங்கி தற்போதுள்ள அஜித், கார்த்திக், அதர்வா வரை பாடல் எழுதிய இளமை கவிஞர் என பெயர் பெற்றவர் கவிஞர் வாலி