சினிமா
ஆட்டம் ஆடல என்றால்.. வெளியே போங்க.! அரோராவை கடுமையாக எச்சரித்த விஜய் சேதுபதி.!
ஆட்டம் ஆடல என்றால்.. வெளியே போங்க.! அரோராவை கடுமையாக எச்சரித்த விஜய் சேதுபதி.!
பிரபல ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் சீசன் 9 தற்போது ரசிகர்களிடையே தீவிரமான ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கடந்த ஒரு மாதத்தை கடந்த நிலையில், போட்டியாளர்களுக்கிடையே உறவுகளும், எதிர்ப்புகளும் தீவிரமடைந்து வருகின்றன.இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த நிலையில், சிலர் வெளியேறியதுடன், புதிய வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இந்நிலையில், நேற்றைய தினம் துஷார் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.சீசன் தொடங்கிய போது போட்டியாளர்கள் அனைவரும் ஆட்டத்தில் ஆர்வத்துடன் இருந்தனர். தினசரி டாஸ்க், சண்டைகள், போட்டி என அனைவரும் தீவிரமாக செயல்பட்டனர். ஆனால், காலப்போக்கில் சிலர் அமைதியான நிலையைத் தழுவி, “போட்டியை விட தங்கள் இருப்பை மட்டுமே கவனிக்கும்” போக்கில் மாறியுள்ளனர்.இதை ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக விமர்சித்து வந்தனர். “பிக் பாஸ் ஹவுஸில் ஆட்டம் குறைந்துவிட்டது” என்ற கருத்துகள் அதிகம் பரவின.தற்போது வெளியாகியுள்ள பிக்பாஸ் ப்ரோமோவில், நடுவர் விஜய் சேதுபதி ஹவுஸ்மேட்ஸிடம் ஒரு சவாலான கேள்வியை எழுப்புகிறார். அதாவது, “இந்த வீட்டில், ஒரு நாளையை கடந்தாலே போதும்.. அந்த நாளுக்கான பேமெண்ட் என்ர bank-ல விழுந்திடும் என்று நினைக்கிறவர் யார்?” எனக் கேட்டிருந்தார். இந்த கேள்விக்கு ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அரோராவின் பெயரைச் சொல்கிறார்கள்.அதைக் கேட்ட விஜய் சேதுபதி, “நீங்க ஆட்டத்தை ஆடாமல் இருக்கிறீங்க, வெளியே போறதுக்கு ரெடியா? சொல்லுங்க, நான் பிக்பாஸ் கிட்ட சொல்லிட்டு தாராளமா உங்களை வெளிய விடச் சொல்லுறேன்!” என்றார். இந்தக் கருத்து வீட்டுக்குள் இருந்த அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.