இலங்கை
இலங்கையில் தாய்மார்களின் இறப்பு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் தாய்மார்களின் இறப்பு தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் தாய்மார்களின் இறப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பரவல் குறைந்துள்ளதால், தாய்மார்களின் இறப்பு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 100,000 நேரடி பிறப்புகளுக்கு தாய்மார்கள் இறப்பு எண்ணிக்கை 62 ஆக குறைந்துள்ளது.
இது மிகவும் சிறந்த நிலைமை என்று குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.