வணிகம்
இ.பி.எஃப்.ஓ. சீர்திருத்தங்கள்: உறுப்பினர்களின் நீண்டகாலப் பிரச்னைகளைத் தீர்க்கும் மக்கள் தொடர்புத் திட்டங்கள் முயற்சி
இ.பி.எஃப்.ஓ. சீர்திருத்தங்கள்: உறுப்பினர்களின் நீண்டகாலப் பிரச்னைகளைத் தீர்க்கும் மக்கள் தொடர்புத் திட்டங்கள் முயற்சி
எழுத்துப் பிழை, ஓய்வூதியம் தொடர்பான தடங்கல்கள் மற்றும் இறந்தவரின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சிரமங்கள் – இவை அனைத்தும் உறுப்பினர்களைத் தங்கள் குறைகளைத் தீர்க்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ) அலுவலகங்களுக்கு அவசரமாக அலைய வைத்த பிரச்னைகளாகும். இ.பி.எஃப்.ஓ. தொடங்கியுள்ள மக்கள் தொடர்புத் திட்டங்கள் இப்போது உறுப்பினர்கள் தங்கள் நீண்டகாலப் பிரச்னைகளைத் தீர்க்க உதவுகின்றன.ஆக்கிலத்தில் படிக்க:டெல்லியில் உள்ள இ.பி.எஃப்.ஓ. அலுவலகத்திற்கு கடந்த சில ஆண்டுகளாகத் தன் தந்தையின் பெயரில் இருந்த எழுத்துப் பிழையை சரிசெய்ய அலைந்து வந்த ஒரு டாக்ஸி ஓட்டுநரான சுதாகர் சௌபே விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இ.பி.எஃப்.ஓ-வின் டெல்லி வசீர்பூர் வடக்குப் பகுதி அலுவலகம் தொடங்கிய ‘சமாதான்’ (Samadhan) மக்கள் தொடர்பு திட்டத்தில் அவரது வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, பிரச்னை விரைவாகத் தீர்க்கப்பட்டது. இதேபோல், ரேகா (முதல் பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்) தனது கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமான பிறகு, அவரது கணக்கில் இருந்து நிதியை விடுவிக்கக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பலமுறை அலுவலகம் அலைந்த நிலையில், அதே முயற்சி மூலம் அவரது பிரச்னை தீர்க்கப்பட்டது. உத்தரகாண்டில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 62 வயதான மோகன் சிங் என்பவரும் இதே நிலைதான். அவர் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது ஓய்வூதியக் கோரிக்கையில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண இ.பி.எஃப்.ஓ. அலுவலகத்திற்கு ஒவ்வொரு மாதமும் வந்து சென்றார். 1990 முதல் 2008 வரை ஒரு பின்னலாடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த போதிலும், முதலாளியால் அவரது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பின்னரும், 58 வயதுக்குப் பிறகு தனது ஓய்வூதியம் மற்றும் மீதமுள்ள வருங்கால வைப்பு நிதித் தொகையை அணுக முடியாமல் தவித்த சிங், இறுதியாக இந்த முயற்சி மூலம் நிவாரணம் பெற்றார்.தனி கவுண்டர் மற்றும் மக்கள் தொடர்புத் திட்டங்கள்இந்த மக்கல் தொடர்புத் திட்டங்கள் முயற்சிகளைத் தவிர, இ.பி.எஃப்.ஓ-வின் மண்டல அலுவலகம் இறப்புப் பணப் பலன்களுக்கான ஒற்றைச் சாளர உதவி மையம் (Single Window Death Claim Counter) கொண்டுள்ளது. இது ஆவணச் சரிபார்ப்பு மற்றும் உரிமைகோரலைச் சமர்ப்பிப்பதை நெறிப்படுத்துவதன் மூலம், இறந்த குடும்ப உறுப்பினர்களுக்கான உரிமைகோரல் செயல்முறையைக் கையாள்வதற்காக அமைக்கப்பட்ட பிரத்யேக கவுண்டர் ஆகும்.இதற்கிடையில், ‘நிதியின்றி அப்கே நிகட்’ (Nidhi Aapke Nikat) என்ற மாதாந்திர வெளிப்புற அணுகல் திட்டம், இ.பி.எஃப்.ஓ. பங்குதாரர்கள் குறை தீர்ப்பதற்காக இ.பி.எஃப்.ஓ. கள அலுவலகங்களுக்கு வர அனுமதிக்கும் ஒரு தளமாகும். இது ஓய்வூதியதாரர்கள் மற்றும் உறுப்பினர்கள், குறிப்பாகச் சமூகத்தின் அடித்தட்டில் உள்ளவர்கள், பிடித்தம் செய்யப்படும் செயல்முறையைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், தேவைப்படும் நேரங்களில் தங்கள் இருப்பு அல்லது நிதியை எவ்வாறு திரும்பப் பெறுவது என்பதை அறியவும் உதவுகிறது.”ஊழியர்களுக்கு இ.பி.எஃப். பங்களிப்புப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அவர்களுக்குத் தெரியாது என்ற பல நிகழ்வுகள் உள்ளன. வேலைப் பதிவு 2000-களில் இருந்தது என்றால், அதற்கு டிஜிட்டல் பதிவும் இருக்காது. உதாரணமாக, 20 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் இருந்து குஜராத் வந்து வேலை செய்த ஒரு தொழிலாளிக்கு 4 வருடங்கள் பிடித்தம் நடந்துள்ளது. ஆனால், அவருக்கு யு.ஏ.என் (Universal Account Number) உட்பட எந்த விவரமும் தெரியாது,” என்று ஒரு மூத்த அரசு அதிகாரி கூறினார். ஆகஸ்ட் மாதம் நடந்த ‘நிதி அப்கே நிகட்’ அணுகலின் போது, அதிகாரிகள் மூன்று வெவ்வேறு நிறுவனங்களில் வேலை செய்த ஒருவரைக் கண்டறிந்தனர், ஆனால் அவர் தனது பி.எஃப். கணக்கு விவரங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை. “இது அவரது மூன்றாவது வேலை, எல்லா இடங்களிலும் பிடித்தம் நடந்திருந்தது, ஆனால் அவருக்கு அவரது பி.எஃப். விவரங்கள் தெரியாது. இ.பி.எஃப்.ஓ-வில் உள்ள தனது நிதியைப் பற்றி அவருக்கு எந்தத் துப்பும் இல்லை. அப்போது அதிகாரி அவருக்கு உதவ ஒரு படிவத்தில் அனைத்து விவரங்களையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.’சமாதான்’ முன்முயற்சி மற்றும் டிஜிட்டல் சவால்கள்சராசரியாக இப்போது, ஏறக்குறைய 500 பேர் தினசரி இ.பி.எஃப்.ஓ-வின் வசீர்பூர் பிராந்திய அலுவலகத்திற்கு வந்து, எழுத்துப் பிழைகள் முதல் அடையாள விவரங்களில் உள்ள முரண்பாடுகள் வரையிலான தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடுகின்றனர். மேலும் அவர்களில் பெரும்பாலோர், டிஜிட்டல் தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியாததால், டோக்கன் அமைப்பு மூலம் குறை தீர்க்கும் சாளரத்தை நாடுகிறார்கள். பலர் தங்கள் கணக்குகள் ஓய்வூதிய நிதி அமைப்பின் காகிதக் காலத்தைச் சேர்ந்தவை என்பதால் நிதியை எடுக்க உதவி கோருகின்றனர்.சமாதான் முயற்சி (Samadhan initiative)”நாங்கள் இந்தச் ‘சமாதான்’ முயற்சியை தினசரி அமர்வுகள் மற்றும் நேருக்கு நேர் தொடர்புகளுடன் தொடங்கினோம். உறுப்பினர்களின் கவலைகளைப் புரிந்துகொண்டு, தனிப்பட்ட கவனத்தை வழங்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நாங்கள் ஈடுபடுகிறோம். அதன் பிறகு ஒரு அதிகாரிக்கு அந்த வழக்கைக் கண்காணிக்கவும், விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுக்குச் சரியான பின்தொடர்தலை உறுதிப்படுத்தவும் ஒதுக்கப்படுகிறது. பல சமயங்களில், இது வெறும் கணக்கியல் சரிசெய்தல் தான், அந்தப் பணம் அவர்களுக்குச் சொந்தமானது,” என்று இ.பி.எஃப்.ஓ. வடக்குப் பிராந்திய ஆணையர் அபயா நந்த் திவாரி கூறினார்.அதன் ஆன்லைன் போர்ட்டலில் அதிக எண்ணிக்கையிலான நிராகரிப்புகள் மற்றும் சிக்கல்கள் குறித்து விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இ.பி.எஃப்.ஓ. கடந்த ஒரு வருடமாக அதன் உறுப்பினர் மையப்படுத்தப்பட்ட சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இ.பி.எஃப்.ஓ-வில் 30 கோடிக்கும் அதிகமான கணக்குகள் உள்ளன, இதில் 7 கோடிக்கும் அதிகமானோர் தீவிரமாகப் பங்களிக்கும் உறுப்பினர்கள் மற்றும் ரூ. 26 லட்சம் கோடிக்கு மேல் உள்ள நிதி உள்ளது.தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் செயல்முறை சீர்திருத்தங்கள்“கடந்த ஆண்டு, நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையிலான தகவல் தொழில்நுட்பப் பிரச்னைகள் இருந்தன… அதன்பிறகு நாங்கள் அதிக எண்ணிக்கையிலான திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். செயல்திறனை மேம்படுத்தத் தொழில்நுட்ப வல்லுநர்களை நாங்கள் பணியமர்த்தினோம், எங்கள் முழு வன்பொருள் உள்கட்டமைப்பையும் மேம்படுத்தினோம், எங்கள் நெட்வொர்க் அலைவரிசையை (bandwidth) கணிசமாக அதிகரித்தோம், மென்பொருள் மாற்றங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டன, முழு படிவம் 19 மற்றும் புதுப்பிக்கப்பட்ட படிவம் 13 அறிமுகப்படுத்தப்பட்டது. இது இ.பி.எஃப்.ஓ. ஊழியர்களின் தினசரி வேலை மற்றும் அதன் விளைவாக உறுப்பினர் சேவைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பெரும்பாலான ஐ.டி. செயல்திறன் பிரச்னைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டன” என்று இ.பி.எஃப்.ஓ. மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி நவம்பர் 1-ம் தேதி மத்திய வருங்கால வைப்பு நிதியத்தின் 73வது நிறுவன தினத்தில் தெரிவித்தார்.இ.பி.எஃப்.ஓ-வின் ஆன்லைன் அமைப்புகளைப் புதுப்பிக்க, சி-டாக் (C-DAC) மூலம் மேம்பாட்டை விரைவுபடுத்த மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இருந்து உதவி பெற்றதாக கிருஷ்ணமூர்த்தி கூறினார். “நாங்கள் பெரிய தரவுத்தள ஒருங்கிணைப்பு மற்றும் இடமாற்றப் பணியைத் தொடர்வதில் கவனம் செலுத்தினோம்… எங்கள் தரவுத்தளம் பழைமையானது, கிட்டத்தட்ட 123 வெவ்வேறு தரவுத்தளங்களை நாங்கள் ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது, இது ஒரு மாபெரும் பணியாகும்… நாங்கள் செயல்முறை எளிமைப்படுத்துதலில் கவனம் செலுத்தினோம்” என்று அவர் கூறினார்.இ.பி.எஃப்.ஓ. அதன் அமைப்புகளைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டபோது, அது ஒரு மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய செலுத்தும் முறையை செயல்படுத்தியது, செக் லீஃப் மற்றும் வங்கி சான்றொப்பம் அகற்றப்பட்டன, மாறுதல்களுக்கு முதலாளியின் ஒப்புதல் அகற்றப்பட்டது, கூட்டுக் கோரிக்கை படிவம் எளிமைப்படுத்தப்பட்டது, பல ஒப்புதல்கள் நீக்கப்பட்டன, ஆதார் அங்கீகாரம் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தாங்களாகவே மாற்றங்களைச் செய்யலாம், ஃபேஸ் அங்கீகார தொழில்நுட்பத்தைப் (FAT) பயன்படுத்தி யு.ஏ.என். உருவாக்குதல் அறிமுகப்படுத்தப்பட்டது, தானியங்கி தீர்வு (auto settlement) ரூ. 5 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டது, பகுதி திரும்பப் பெறுதல்களில் மீதமுள்ள பகுதியில் ஏதேனும் சிக்கல் இருந்தாலும் பகுதி செலுத்துதல் செய்யப்படலாம் என்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன, மேலும் பரிமாற்றக் கோரிக்கைகளைச் செயல்படுத்த ஒப்புதல்களின் எண்ணிக்கையும் நிலைகளும் மிகவும் குறைக்கப்பட்டன.கடந்த மாதம், இ.பி.எஃப்.ஓ. நிதி எடுப்பதற்கான வகைகளைத் தற்போதுள்ள 13 வகைகளிலிருந்து மூன்று பிரிவுகளாக (அத்தியாவசியத் தேவைகள் – நோய், கல்வி, திருமணம்; வீட்டுத் தேவைகள்; மற்றும் சிறப்புச் சூழ்நிலைகள்) குறைத்து, திரும்பப் பெறும் செயல்முறையை நெறிப்படுத்தியது. அதே நேரத்தில் குறைந்தபட்சம் 25 சதவீத இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டும் என்ற விதியையும் அறிமுகப்படுத்தியது. இறுதித் தீர்வுக்கான கோரிக்கைகள் நிராகரிப்பு விகிதம் 2018-19 இல் 18.2 சதவீதமாக இருந்த நிலையில், 2022-23 இல் 33.8 சதவீதமாக உயர்ந்தது. இறுதித் தீர்வுகளுக்கான நிராகரிப்பு விகிதம் 2023-24 இல் 30.3 சதவீதமாக மேம்பட்டுள்ளது, 2024-25க்கான தரவுகள் இன்னும் வரவில்லை.