இலங்கை

ஐந்து வயது சிறுவனுக்கு நொடிப்பாழுதில் அரங்கேறிய துயரம்

Published

on

ஐந்து வயது சிறுவனுக்கு நொடிப்பாழுதில் அரங்கேறிய துயரம்

சிகிரியா காவல் பிரிவுக்குட்பட்ட அவுடங்காவ பகுதியில் உள்ள ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் மூழ்கி களனி, தலுகமவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

சிறுவன், தனது பெற்றோருடன் சனிக்கிழமை 8 ஆம் திகதி மாலை நீந்திக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

நீச்சல் தடாகத்தில் மூழ்கிய சிறுவன் மீட்கப்பட்டு, உடனடியாக தம்புள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சடலம் தம்புள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version