விளையாட்டு

ஒலிம்பிக்கில் ஏற்பட்ட மன வேதனை… உலக சாம்பியன்ஷிப்பில் இளவேனில் வாலறிவன் மீண்டு வந்தது எப்படி?

Published

on

ஒலிம்பிக்கில் ஏற்பட்ட மன வேதனை… உலக சாம்பியன்ஷிப்பில் இளவேனில் வாலறிவன் மீண்டு வந்தது எப்படி?

எகிப்து நாட்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் வெங்கல பதக்கம் வென்றுள்ளார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து இளவேனில் இந்த பதக்கத்தை வென்றுள்ளார். போட்டியின் இறுதி வரை முன்னணி வகித்த அவர், தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19-வது சுடுதலுக்கு பின்னர் சரிவை சந்தித்து, 3-வது இடத்திற்கு சென்றார். இதனால், இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.எனினும் அவர், 232 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்றார். தென் கொரியாவின் பான் ஹியோஜின் 255 புள்ளிகளுடன் முதல் இடமும், சீனாவின் வாங் ஜைபெய் 254 புள்ளிகளுடன் 2-வது இடமும் பிடித்தனர். இந்த பிரிவில் பதக்கம் வென்ற இளவேனில், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற 3-வது இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு கடந்த 2018-ஆம் ஆண்டு அஞ்சும் மோடுகில் மற்றும் 2023-ஆம் ஆண்டு  மெஹுலி கோஷ் ஆகியோர் பதக்கம் வென்றுள்ளனர்.பயிற்சியாளர்  நேஹா சவான் பேசியதாவது, ஜூனியர் சுற்றில், நீங்கள் விளையாட்டை ரசிக்கிறீர்கள். நீங்கள் சீனியர்ஸ் வரை சென்று முதல் 3 இடங்களுக்குள் வந்ததும், அது வெற்றி பெறுவது பற்றியதாக மாறும். அந்த செயல்பாட்டில், அந்த பயணத்தில் நீங்கள் விளையாட்டை ரசிப்பதை இழக்கிறீர்கள். இளவேனில் மீண்டும் அந்த நோக்கத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக நான் உணர்கிறேன் என்று அவர் கூறினார்.பரபரப்பான இறுதிச் சுற்றுவீராங்கனை இளவேனில் 18 சுற்றுகளிலும் முன்னிலை வகித்தார். முன்னதாக நடைபெற்ற தகுதி சுற்றில் 26 வயதான இளவேனில்  633.4 மதிப்பெண்களுடன் ஐந்தாவது இடத்தை பிடித்தார். 19-வது சுற்றின் போது இளவேனில் கொஞ்சம் பின் தங்கினார். பின்னர், அதை சுதாரித்துக் கொண்டு அடுத்த சுற்றில் மீண்டு வந்தார். ஆனால், இறுதி சுற்றில்  10.4 மற்றும் 9.9 எனப் பதிவு செய்து மொத்தம் 232 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்தார் என்று  பயிற்சியாளர் நேஹா சவான் தெரிவித்துள்ளார்.மேலும், ”நீங்கள் முதல் மூன்று இடங்களில் இருக்கும் பொழுது ஒரு பதக்கம் உறுதியாகிவிட்டது என்பதை உணர்கிறீர்கள். அதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் வெல்ல வேண்டுமெனில், சிறப்பாக செயல்படுவது முக்கியம். அதில் 1 சதவிகிதம் அதிர்ஷ்டமும் முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version