இலங்கை

காட்டு யானைகளின் தாக்குதலால் மீனவ தோணிகள் சேதம் !

Published

on

காட்டு யானைகளின் தாக்குதலால் மீனவ தோணிகள் சேதம் !

இரண்டு நாட்களாக மட்டக்களப்பு  புதுகுடியிருப்பு  பகுதிகளில் காட்டு யானைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

புதுக்குடியிருப்பு பகுதியில் 4 மீனவர்களின் தோனிகளையும் விவசாய நிலங்களையும் பயன் தரும் தென்னை மரங்களையும், பலா மரம் ,வாழை மரங்களை உடைத்து நாசம் செய்து சேதப்படுத்தி உள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியான காட்டு யானை தாக்குதலால் உயிர் அச்சத்தில் வாழும் மக்கள், தமது பகுதியில் யானைகளின் பிரச்சினையை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

சில நாட்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் உயிர் மற்றும் ஜீவனுபாய வாழ்வாதாரம் காட்டு யானைகளால்  பாதிக்கப்படுவதற்கு  முன் உடனடி தீர்வை பெற்றுத் தர வேண்டும் எனவும் புதுக்குடியிருப்பு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version