சினிமா
கிரிக்கெட் வீரருடன் 2வது திருமணமா? நடிகை சம்யுக்தா ஷான் கொடுத்த பதில்…
கிரிக்கெட் வீரருடன் 2வது திருமணமா? நடிகை சம்யுக்தா ஷான் கொடுத்த பதில்…
தமிழ் சினிமாவில் சிறுசிறு ரோலில் நடித்து அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் நடிகை சம்யுக்தா ஷான். திருமணமாகி விவாகரத்து பெற்று தன் குழந்தையுடன் இருக்கும் சம்யுக்தா, தொகுப்பாளினி பாவனாவுடன் தற்போது வசித்து வருகிறார்.சமீபத்தில் நடந்த மதராஸ் மாஃபியா கம்பெனி என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளா சம்யுக்தா. அப்படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு தனிப்பட்ட மற்றும் வாய்ப்புகள் சம்பந்தமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில், இணையத்தில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான அனிருதா ஸ்ரீகாந்துடன் நடிகை சம்யுக்தா விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியது. அதற்கு காரணம் அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்கள் தான்.ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருந்தபோது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் அவரை விவாகரத்து செய்து வாழ்ந்து வருகிறார் சம்யுக்தா.இதுதொடர்பான கேள்விக்கு சம்யுக்தா மறுப்பு தெரிவிக்கவில்லை. ‘எல்லாமே இணையத்திலேயே இருக்கிறது, என்ன இருக்கிறதோ அதுதான்’ என்று அதற்கான கேள்விக்கு பதிலளித்தார் சம்யுக்தா. விரைவில் இருவரும் திருமணம் செய்வார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.