இலங்கை
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு ; சந்தேகநபர்கள் மானிப்பாயில் கைது!
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு ; சந்தேகநபர்கள் மானிப்பாயில் கைது!
கொழும்பில் துப்பாக்கி சூட்டினை நடத்திய மூவர் நேற்றய தினம் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று முன்தினம் 07ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அந்தவகையில் துப்பாக்கி சூட்டினை நடாத்தியவர்கள் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், மானிப்பாய் பொலிஸார் குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.
கொட்டாஞ்சேனையை சேர்ந்த ஆண்கள் இருவரும், பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸாரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொறுப்பெடுப்பதற்கு கொட்டாஞ்சேனை பொலிஸார் யாழிற்கு விரைந்துள்ளனர்.