சினிமா
சுதந்திரத்தை வேலைக்கு போறதில காட்டுங்க… வேற எதிலையும் காட்டாதீங்க.! கஸ்தூரியின் கருத்து
சுதந்திரத்தை வேலைக்கு போறதில காட்டுங்க… வேற எதிலையும் காட்டாதீங்க.! கஸ்தூரியின் கருத்து
சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கருத்துகளைத் தைரியமாக பகிர்வதற்காக எப்போதும் பேசப்படும் நடிகை கஸ்தூரி, மீண்டும் ஒருமுறை தனது கருத்துகளால் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார்.தற்போது, ஒரு இளம் பெண் இரவு நேரத்தில் வெளியே செல்வது குறித்து கஸ்தூரி தெரிவித்த கருத்துகள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.சமீபத்தில் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் கஸ்தூரி, “எனக்கும் ஒரு டீனேஜ் பெண் இருக்கிறார். ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும், எந்த காரணத்திற்காகவும் நேரம் கெட்ட நேரத்தில் வெளியே போகக் கூடாது. உங்களால் ரொம்ப முடியவில்லை என்றால், ரூமில இருந்தே பேசுங்கள்.” எனத் தெரிவித்திருந்தார். மேலும், “பெத்தவங்க வாயக்கட்டி, வயித்தைக் கட்டி படிக்க அனுப்பிச்சா, நீ பண்ணுறது என்ன? படிச்சு கலெக்டர் ஆகுங்க! இல்ல டீச்சர் ஆகுங்க… அதுல உங்க சுதந்திரத்தைக் காட்டுங்க! நடு ராத்திரில போய் யார் கூடையோ காரில் உட்காருறதுலையா உங்க சுதந்திரத்தைக் காட்டுவீங்க..” என்றார் கஸ்தூரி. இந்தப் பதிவு வெளியான சில மணிநேரங்களிலேயே அதிகளவான வரவேற்பினைப் பெற்றுள்ளது. கஸ்தூரியின் கருத்தை பலரும் பாராட்டினாலும், சிலர் அதை பெண்களின் சுதந்திரத்தை குறைக்கும் கருத்து என்று விமர்சித்துள்ளனர்.