இலங்கை

திருகோணமலைக்கு பெருந்தோட்ட பிரதிஅமைச்சர் விஜயம்!

Published

on

திருகோணமலைக்கு பெருந்தோட்ட பிரதிஅமைச்சர் விஜயம்!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் நிதியை வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும், இன்று 09ஆம் திகதி திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், 

Advertisement

குறித்த நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திராவின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. குறித்த நிகழ்வில், பனை சார் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு அமைச்சரினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதோடு, திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் ‘கற்பகம்’ என்ற பெயரில் பனை சார் உற்பத்தி பொருட்களின் விற்பனை நிலையம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் பெருமதி வாய்ந்த பனை உற்பத்தி பொருட்களுக்கான உபகரணங்களும் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version