இலங்கை
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்!
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்!
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தையாரும், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி. மூ. இராசமாணிக்கம் அவர்களின் புதல்வருமான 67வயதுடைய மருத்துவர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் நேற்று 07ஆம் திகதி பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் திருவுடல் இன்று சனிக்கிழமை 08ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை (Jayaratne Respect Home) இல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்னாரின் திருவுடல் நாளை 09ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.