இலங்கை

விடுதலைப் புலிகள் அமைப்பு மீது மீண்டும் கவனத்தை திருப்பிய இந்திய உளவுத்துறை

Published

on

விடுதலைப் புலிகள் அமைப்பு மீது மீண்டும் கவனத்தை திருப்பிய இந்திய உளவுத்துறை

இந்தியாவில் இயங்கும் தாவூத் இப்ராஹிம் குற்றக்கும்பல் (டி-சிண்டிகேட்) மற்றும் விடுதலைப் புலிகளின் எஞ்சிய பிரிவினருக்கும் இடையே உருவாகி வரும் புதிய, அபாயகரமான கூட்டணியைக் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வட இந்தியாவில் காவல்துறை நடவடிக்கைகளால் பெரும் இழப்பைச் சந்தித்த டி-சிண்டிகேட்,தற்போது தமது போதைப் பொருள் வர்த்தகத்தை விரிவுபடுத்த தென்னிந்தியா மற்றும் இலங்கையை குறிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இதற்காக அந்த அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் பழைய வலையமைப்பை நாடிச் சென்றுள்ளது.

இந்தக் கூட்டணியில், டி-சிண்டிகேட் தமது பணபலத்தையும் சர்வதேச அணுகலையும் வழங்குகிறது.

பதிலுக்கு, விடுதலைப்புலிகளின் எஞ்சிய குழுக்கள் பாக்கு நீரிணை உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் குறித்த ஆழமான உள்ளூர் அறிவு மற்றும் தளவாட ஆதரவை வழங்குகின்றன.

Advertisement

தலைமை மற்றும் நிதி இல்லாமல் போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளின முன்னாள் உறுப்பினர்களுக்கு இந்த நிதி உதவி ஒரு உயிர்நாடியாக அமைகிறது என இந்திய புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிதியைக் கொண்டு அவர்கள் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது மற்றும் ஆயுதங்கள் வாங்குவது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று அஞ்சப்படுகிறது.

இப்ராஹிம் தாவூத்தின் மூலதனமும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தளவாடத் திறனும் இணைவது தென்னிந்திய போதைப்பொருள் சந்தையில் ஒரு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது ஒரு அபாயகரமான இணைவாகும் என இந்தியப் பாதுகாப்பு அமைப்புகள் கருதுகின்றன.

ஏனென்றால், இது வெறுமனே பயங்கரவாதத்தை மட்டும் அச்சுறுத்தாமல், போதைப் பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாதச் செயல்பாடுகள் அனைத்தையும் ஆதரிக்கும் ஒரு குற்றவியல் உள்கட்டமைப்பை உருவாக்கக்கூடும்.

இந்தநிலையில், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் பிற உளவுப் பிரிவுகள் இந்தக் கூட்டணியின் நிதிப் பாய்ச்சல்கள் மற்றும் தகவல் தொடர்புகளைத் தீவிரமாகக் கண்காணிப்பதுடன், தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவுகளைச் சுற்றி கடலோர கண்காணிப்புகளை தீவிரப்படுத்தியுள்ள இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version