இலங்கை
வீதியில் முறிந்து விழுந்த மரம் ; போக்குவரத்து பாதிப்பு
வீதியில் முறிந்து விழுந்த மரம் ; போக்குவரத்து பாதிப்பு
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா – வனராஜா பகுதியில் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை காலை பைனஸ் மரமொன்று முறிந்து வீழ்ந்ததனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அட்டன் – பலாங்கொடை, பொகவந்தலாவை – ஹட்டன், சாமிமலை மற்றும் மஸ்கெலியா போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக குறித்த பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மின் கம்பமும் விழுந்து சேதமடைந்துள்ளது.
சேதமடைந்துள்ள மின் கம்பங்களை சீர்படுத்தும் பணிகள் மின்சாரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பகுதியில் பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன் பொலிஸார், வீதி அபிவிருத்தி அதிகாரிகள், பிரதேச மக்கள் இணைந்து, மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.