இலங்கை

வெளிநாடொன்றில் மிக உயரிய விருதை வென்று வரலாறு படைத்த இலங்கைத் தமிழர் ; குவியும் வாழ்த்துக்கள்

Published

on

வெளிநாடொன்றில் மிக உயரிய விருதை வென்று வரலாறு படைத்த இலங்கைத் தமிழர் ; குவியும் வாழ்த்துக்கள்

உயரிய இராணுவ விருதை இலங்கைத் தமிழர் வாகீசன் மதியாபரணம் கனடாவின் பெற்றார்

இலங்கையில் பிறந்த தமிழரான வாகீசன் மதியாபரணம், கனடாவின் மிக உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதைப் பெற்ற முதல் தமிழராக வரலாறு படைத்துள்ளார்.

Advertisement

கனடாவின் ஆளுநர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் நடைபெற்ற விழாவில், வாகீசன் மதியாபரணத்திற்கு இந்த பெருமை வழங்கப்பட்டது.

அகதியாக கனடாவுக்கு வந்த அவர், சுமார் முப்பது ஆண்டுகள் கனடா இராணுவத்தில் பணியாற்றி, அண்மையில் ஓய்வுபெற்றார்.

“இந்த விருது ஒரு பதக்கம் மட்டுமல்ல, என் கனவின் நிறைவேற்றம்,” என அவர் கூறினார்.

Advertisement

அவரது சாதனை, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், அகதியாக புதிய வாழ்க்கையைத் தொடங்கிய அனைவருக்கும், ஊக்கம் அளிக்கும் பெருமைமிகு வரலாறு ஆகும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version