இலங்கை
ஹெராயினுடன் பெண் ஒருவர் கைது
ஹெராயினுடன் பெண் ஒருவர் கைது
சீனிகமவில் 6 கிலோகிராம் ஹெராயினுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சீனிகமவில் நேற்று (08) 5 கிலோகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட ஆறு பேரை ஏழு நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று(9) பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் காலி, அஹங்கம, தெல்வத்த, வதுகெதர மற்றும் சீனிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.