பொழுதுபோக்கு
OTT: எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது… ஓ.டி.டி-யில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் படங்கள் இவைதான்!
OTT: எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது… ஓ.டி.டி-யில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் படங்கள் இவைதான்!
ஒவ்வொரு வாரமும் வீக் எண்டின் போது குடும்பத்துடன் ஓ.டி.டி-யில் படம் பார்த்து ரசிகர்கள் மகிழ்ந்து வருகின்றனர். அப்படி எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்களின் ஓ.டி.டி பட்டியல் மற்றும் அதிக ரேட்டிங் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.நாயகன்கடந்த 1987-ஆம் ஆண்டு கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘நாயகன்’. இந்த படத்திற்கு இன்று வரையிலும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மெகா ஹிட்டான இப்படம் இந்திய சினிமாவின் காட் ஃபாதர் திரைப்படம் என்றும் கூறுவார்கள். ஆக்ஷன், செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்திற்கு அமேசான் பிரைம் 8.6 ரேட்டிங் கொடுத்துள்ளது.இருவர்1997-ல் வெளியான திரைப்படம் ‘இருவர்’. இந்த படத்தில் மோகன்லால், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்திருந்தனர். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆர், கருணாநிதி குறித்து இந்த படத்தில் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அமேசான் பிரைம் ஓ.டி.டி தளம் 8.4 ரேட்டிங் கொடுத்துள்ளது. இந்த வீக் எண்டு ‘இருவர்’ படத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.அன்பே சிவம்கமல் நடித்ததில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு திரைப்படம் என்றால் அது ‘அன்பே சிவம்’ திரைப்படம் தான். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மாதவன், நாசர், கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் ரிலீசாகும்போது கொண்டாட தவறிய ரசிகர்கள் 10 வருடங்களுக்கு பின் ஆஹா ஓஹோவென கொண்டாடினர். அசத்தலான இந்த ஃபீல் குட் திரைப்படத்திற்கு அமேசான் பிரைம் ஓ.டி.டி தளம் 8.6 ரேட்டிங் கொடுத்துள்ளது.ரங்கோலி2023-ல் வெளிவந்த ஃபீல் குட் திரைப்படம் ‘ரங்கோலி’. பள்ளி சிறுவர்களை பற்றிய கதைக்களம் ஆகும். இப்படத்திற்கு அமேசான் பிரைம் ஓ.டி.டி தளம் 7.4 ரேட்டிங் கொடுத்துள்ளது.பரியேறும் பெருமாள்மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. சாதிப் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு அமேசான் பிரைம் ஓ.டி.டி தளம் 8.7 ரேட்டிங் கொடுத்துள்ளது.பேரன்புமம்மூட்டி, அஞ்சலி நடிப்பில் ராம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘பேரன்பு’. அப்பா, மகள் உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு அமேசான் பிரைம் 8.7 ரேட்டிங் கொடுத்துள்ளது. இந்த வீக் எண்டை இந்த படங்களை பார்த்து என்ஜாய் பண்ணுங்க.