பொழுதுபோக்கு
சிலையோடு வந்த பேரன், உயிர் தப்பிய பாட்டி; கணவன் பரிசால் கடுப்பான மனைவி: ஜீ தமிழ் சீரியல் அப்டேட்
சிலையோடு வந்த பேரன், உயிர் தப்பிய பாட்டி; கணவன் பரிசால் கடுப்பான மனைவி: ஜீ தமிழ் சீரியல் அப்டேட்
அவமானப்படுத்தும் அபிராமி.. வெற்றி வீட்டில் லட்சுமிக்கு நடந்தது என்ன? – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட் கெட்டிமேளம் சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் துளசி கையில் காயம் ஏற்பட வெற்றி பதறிய நிலையில் இன்று, மீனாட்சி தனது அண்ணனை சந்தித்து வெற்றி உன் மேல பயங்கர கோபத்துல இருக்கான் அவன் கண்ல பட்டுடாத, மாமா வேற எம்எல்ஏ ஆயிட்டாரு.. ஊர்ல அவருக்கு தெரியாத ஆளுங்களே இல்ல என்று எச்சரிக்கிறாள். அதன் பிறகு வெற்றி துளசியிடம் உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக கணவனை சும்மா விடமாட்டேன் என்று சொல்கிறாள். அடுத்து தியா பாப்பா எனக்கு பசிக்குது என்று சொல்ல வெற்றி பாப்பாவுக்கும் துளசிக்கும் சாப்பாடு போட்டு கொண்டு வருகிறார். துளசியை சாப்பிட சொல்லி கொடுத்து விட்டு தியாவிற்கு ஊட்டப் போக தியா அம்மாவுக்கு கைல அடிபட்டு இருக்கும்போது அவங்க எப்படி சாப்பிடுவாங்க நீங்க முதல்ல அவங்களுக்கு ஓட்டுங்க அப்பதான் நான் சாப்பிடுவேன் என்று சொல்கிறாள். ஆனால் துளசி அதெல்லாம் வேண்டாம் நானே சாப்பிடுகிறேன் என்று சாப்பிட முயற்சி செய்ய அவளால் சாப்பிட முடியாமல் போக வெற்றி ஊட்டி விடுகிறான். இங்கே மகேஷ் அஞ்சலிக்கு ஒரு கிப்ட் கொடுத்து அனுப்ப அஞ்சலி அதை பார்த்து கோபமாகி கொண்டு வந்தவனை திட்டி விரட்டி விடுகிறாள். அதைத்தொடர்ந்து லட்சுமிக்கு போன் செய்து நாளைக்கு நீங்க வீட்டுக்கு வாங்க பாட்டிக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிற விஷயமா அப்பா கிட்ட டாக்குமெண்ட்ல கையெழுத்து வாங்கிடலாம் என்று சொல்ல, அடுத்த நாள் இருவரும் கிளம்பி வருகின்றனர். மீனாட்சி என்ன துளசிக்கு அடிபட்டு இருக்கிறதுனால பார்க்க வந்தீங்களா என்று கேட்க, லட்சுமி பதறுகிறாள். வெற்றி அத்தை பெரிய காயம் எல்லாம் இல்லை என்று ஆறுதல் சொல்கிறான். பிறகு ஈஸ்வரமூர்த்தி டாக்குமெண்டில் கையெழுத்து போடப்போகும் சமயத்தில் இரண்டு பெண்கள் வீட்டு வாசலில் வந்து பண உதவி கேட்டு நிற்க, அபிராமி உதவி கேட்டு வீடு தேடி வருகிறேன் உங்களுக்கெல்லாம் அசிங்கமா இல்லையா லட்சுமியை அவமானப்படுத்துவது போல மறைமுகமாக பேசுகிறாள். இதனால் அஞ்சலி கோபமடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.போட்டியில் ஜெயித்த இசை.. விஷாலை அடைய ஸ்ரீஜா போடும் திட்டம்.. நடக்கப்போவது என்ன? – பாரிஜாதம் இன்றைய எபிசோட் அப்டேட் பாரிஜாதம் சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் இசை படையல் போட்ட நிலையில் இன்று, ருக்குமணி யாருக்கும் தெரியாமல் சாப்பாட்டை எடுத்து இலையை காலி செய்ய அதன் பிறகு சிந்தாமணி மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் மீண்டும் சாப்பாட்டை வைத்து விடுகின்றனர். ஆனால் இரவில் லேட்டாக வீட்டுக்கு வந்த விஷால் இந்த சாப்பாட்டை சாப்பிட்டு ஒரு பூவை மட்டும் வைத்து விட மறுநாள் காலையில் எழுந்து பூஜை அறையை திறந்து பார்க்க இலை காலியாக இருப்பதை பார்த்து முன்னோர்கள் ஆசீர்வாதம் கொடுத்து விட்டதாக சுப்ரதா சந்தோஷம் அடைகிறாள். இதனால் ஸ்ரீஜா சிந்தாமணி, பானுமதி ஆகியோர் கடுப்பாகின்றனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீஜா விஷாலை அடைவதற்காக திட்டமொன்றை தீட்டி தனது தோழி வீட்டிற்கு செல்கிறாள். பிறகு பார்த்து இருப்பதாக சொல்லி விஷாலை தோழி வீட்டிற்கு அழைக்கிறாள். விஷாலின் அங்கு செல்ல அவனுக்கு ஜூஸின் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து விஷாலை மயங்க வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.குழியில் இறங்க போன பாட்டி.. சிலையுடன் வந்த கார்த்தி, நடந்தது என்ன? – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம் சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் கார்த்திக் குருமூர்த்தியை பிடித்து சிலையை மீட்ட நிலையில் இன்று, கோவிலில் கார்த்தி வராத காரணத்தினால் பரமேஸ்வரி பாட்டியை குழிக்குள் இறங்கச் சொல்கின்றனர். பாட்டி கண்டிப்பா என் பேரன் வந்துருவான்.. அவன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொல்கிறார். மேலும் கார்த்திக் தொடர்ந்து போன் செய்ய போன் ரீச் ஆகாமல் இருக்கிறது. ஒரு கட்டத்தில் பரமேஸ்வரி பாட்டி குழியில் இறங்கபோகும் சமயத்தில் கார்த்திக் சிலை உடன் வந்து பாட்டியை தடுத்து நிறுத்துகிறான். அதன் பிறகு குருமூர்த்தி கூப்பிட்டு சொல்லுடா யார் சிலையை கடத்த சொன்னது என்று கேட்க அவன் சிவனாண்டியை மாட்டி விடாமல் நான் தான் என பழியை ஏற்றுக் கொள்கிறான். அதன் பிறகு கோவிலில் பந்த கால் நடும் நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிய கும்பாபிஷேகமும் நல்லபடியா நடந்துட்டா போதும் என பரமேஸ்வரி பார்ட்டி வேண்டுகிறார். பிறகு ஊர் மக்கள் சாமுண்டீஸ்வரி சந்தித்து சிலைய நீங்க திருடல என இப்பதான் தெரிய வந்தது என்று மன்னிப்பு கேட்க ராஜராஜன் இதைத்தான் அன்னைக்கே சொன்னோம் என்று திட்டுகிறார். பிறகு ஊர் மக்கள் இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கிறோம் என்று மன்னிப்பு கேட்டு கலைந்து செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.