இலங்கை
வரவு செலவு திட்டம் மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று!
வரவு செலவு திட்டம் மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று!
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று (10.11) நடைபெறவுள்ளது.
வரவு செலவு திட்டம் இரண்டாம் வாசிப்பு விவாதம் 6 நாட்களுக்கு நடைபெறும் என்றும், வாக்கெடுப்பு நவம்பர் 14 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு நடைபெறும் என்றும் நாடாளுமன்ற தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
வரவு செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 15 முதல் 17 நாட்களுக்கு நடைபெறும் என்றும், மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும் என்றும் நாடாளுமன்ற தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, வரவு செலவு திட்ட காலத்தில் ஒவ்வொரு நாளும் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை