உலகம்

அமெரிக்காவின் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர உடன்பாடு!

Published

on

அமெரிக்காவின் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர உடன்பாடு!

அமெரிக்காவில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 40 நாள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர உடன்பாடு ஒன்றை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈடாக சுகாதாரத் திட்டத்தில் சில சலுகைகளை வழங்குவதாக குடியரசுக் கட்சி உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சட்டமூலம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஒப்பந்தத்தின் கீழ், மூன்று முன்னாள் ஆளுநர்கள் உட்பட எட்டு செனட்டர்கள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்களிப்பார்கள் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

வரலாற்றில் மிகப்பெரிய பொது முடக்கத்தை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, எப்போதும்  இல்லாத நெருக்கடியை தற்போது  எதிர்கொண்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 01ஆம் திகதி தொடங்கிய பொது முடக்கம், 40 நாளாக தொடர்ந்தும் நீடித்துள்ளது. பொது முடக்கம் காரணமாக, 700,000 பேர் ஊதியமின்றி பணியில் ஈடுபட்டுள்ளதுடன்  670,000 பேர் வேலை இழந்துள்ளனர். மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் அத்தியாவசிய சேவைகளை  அணுக முடியவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவில் உள்ள 40 முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகளும் இந்த முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அமெரிக்காவில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு புரேமா வழங்கும் உணவுப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version