இலங்கை

”அரசுக்கு கடும் அழுத்தம்” – நாமல் எச்சரிக்கை!

Published

on

”அரசுக்கு கடும் அழுத்தம்” – நாமல் எச்சரிக்கை!

நுகேகொடை பேரணி அரசாங்கத்திற்கு கடும் அழுத்தமாக அமையும் என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே நுகேகொடையில் எதிர்வரும் 21ஆம் திகதி பேரணி இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு குறித்து கட்சிகள் எடுக்கும் முடிவை நாம் மதிக்கின்றோம். 

 நுகேகொடை பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார். எனினும், அவரது ஆசிர்வாதம், ஆதரவு அந்தக் கூட்டத்தக்கு நிச்சயம் இருக்கின்றது. மக்களுக்காகக் களத்தில் இறங்கி போராடிய தலைவர்தான் மகிந்த ராஜபக்ச. அவரின் வழிகாட்டலுடன் எமது பயணம் தொடரும் எனவும்  நுகேகொடை அரசியல் பேரணியானது  அரசுக்கு நிச்சயம் கடும் அழுத்தமாக அமையும் எனவும்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version