பொழுதுபோக்கு
இப்படி ஒரு பாட்டு எழுதிருக்க… இன்னும் உன்ன மாதர் சங்கம் விட்டு வச்சிருக்கா? வாலியை பார்த்து கேட்ட நாகேஷ்!
இப்படி ஒரு பாட்டு எழுதிருக்க… இன்னும் உன்ன மாதர் சங்கம் விட்டு வச்சிருக்கா? வாலியை பார்த்து கேட்ட நாகேஷ்!
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. எம.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷங்களில் கவிஞர் வாலியும் நடிகர் நாகேஷும் மிக முக்கியமானவர்கள். நாகேஷ் பன்முக மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதேபோல் வாலியும் 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இந்த இரு கலைஞர்கள் மறைந்தாலும் அவர்களின் நினைவுகளும், சினிமாத்துறைக்கான பங்களிப்பும் சமூக வலைத்தளங்கள் மூலமாக இக்கால தலைமுறையினருக்கும் கொண்டு செல்லப்படுகிறது. சினிமாவில் வாய்ப்புக்காக காத்திருந்த போது நடிகர் நாகேஷ், கவிஞர் வாலி ஆகியோர் சென்னை தியாகராயநகர் கிளப் ஹவுஸ் அறையில் தான் தங்கியிருந்துள்ளனர். அங்கு உருவான அவர்களின் நட்பு பிற்காலத்தில் 2 பேரும் சினிமாவில் மிகப்பெரிய இடத்தில் இருந்தபோதும் அதேபோல் தான் தொடர்ந்துள்ளது. இதனை கவிஞர் வாலியும், நடிகர் நாகேஷும் பலமுறை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மகளிர் மட்டும் படத்தில் இடம்பெற்றிருந்த பாடலுக்கு உன்னை மாதர் சங்கம் இன்னுமா விட்டு வைத்திருக்கிறது என்று நடிகர் நாகேஷ், வாலியை பார்த்து கேட்டுள்ளார். அதாவது, ’மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் நடிகர் நாகேஷ் இறந்தது போன்று நடித்திருப்பார். இதனை பார்த்த கவிஞர் வாலி, நடிகர் நாகேஷ் வீட்டிற்கு நேரடியாக சென்று பல பேர் நடித்து சாகடிப்பார்கள். ஆனால் நீ செத்தவனாக நடித்து மற்றவர்களை வாழவைத்துள்ளாய் என்று நாகேஷை கட்டிப்பிடித்து பாராட்டினார். இதே படத்தில் ‘கறவை மாடு மூன்று காளை மாடு ஒன்று’ என்ற பாடல் வரும் இதை பார்த்த நாகேஷ் ஆனாலும் உனக்கு தைரியம் அதிகம் தான் வாலி, மூன்று பொண்ணுங்களையும் ஒரு ஆணையும் கனெக்ட் பண்ணி பாட்டு எழுதியிருக்க உன்னை இன்னுமா மாதர் சங்கம், பத்திரிகை சங்கம் எல்லாம் விட்டு வைத்திருக்கிறது என்றாராம். இதற்கு ’மகளிர் மட்டும்’ படம் மகளிருக்கானது என்பதால் அப்படி எழுதியதாக வாலி பதிலளித்துள்ளார்.கடந்த 1994-ல் இயக்குநர் சங்கீதம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘மகளிர் மட்டும்’. இந்த படத்தில் ரேவதி, ஊர்வசி, ரோகிணி, நாசர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.