சினிமா

உடைந்த கண்ணாடியுடன் தீவிரமான லுக்கில் ரசிகர்களைக் கவரவரும் அனுராக் காஷ்யப்…

Published

on

உடைந்த கண்ணாடியுடன் தீவிரமான லுக்கில் ரசிகர்களைக் கவரவரும் அனுராக் காஷ்யப்…

தமிழ் திரை உலகில் புதிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில், ஐசரி கணேஷின் “Vels Film International” தயாரிப்பில் உருவான “அன்கில் _123” என்ற படத்தின் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் அதனைப் பகிர்ந்து வருகின்றனர்.“அன்கில் _123” பட போஸ்டரில், பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், உடைந்த கண்ணாடியுடன் ஒரு தீவிரமான முகபாவனையில் காணப்படுகிறார். இந்த லுக்கை பார்த்த ரசிகர்கள், “அனுராக் காஷ்யப் இந்த படத்தில் வில்லனாக வரப்போகிறார் போல!” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.போஸ்டரின் காட்சித் தோற்றம், கறுப்பு பின்னணியில் மின்னும் ஒளிச்சாயல்கள், சிதறிய கண்ணாடி ஆகியவை சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகையை நினைவூட்டுகின்றன.இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்குகிறார். இவர் முன்பும் பல வெற்றிப் படங்களை இயக்கியவர். சாம் ஆண்டன் பெரும்பாலும் காமெடி-த்ரில்லர் கலவை படங்களுக்காக அறியப்பட்டவர். ஆனால் “அன்கில் _123” படம் ஒரு ஆக்‌ஷன்-த்ரில்லர் கலந்த கலவையாக உருவாகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version