இலங்கை

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் உடல் உறுப்புகள் தானம்!

Published

on

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் உடல் உறுப்புகள் தானம்!

எதிர்பாராத விதமாக  திடீரென உயிரிழந்த கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவரின், சிறுநீரகம் உட்பட வேறு ஒருவருக்குப் பொருந்தக்கூடிய உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார விஞ்ஞான பீடத்தில் தாதியியல் மற்றும் குடும்ப நலப் பட்டப் படிப்பை பயின்று வந்த மூன்றாம் வருட மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திலிருந்து கடந்த 5 ஆம் திகதி தனது வீட்டிற்கு சென்றிருந்த குறித்த  மாணவி, 6 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில், தனது வீட்டின் குளியலறையில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்  சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.

Advertisement

முதுகெலும்பு சுருக்கத்தால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளது என்று பிரேதப் பரிசோதனையின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், பெற்றோரின் தீர்மானத்துக்கமைய, அவரது உடல் உறுப்புகள் அகற்றப்பட்ட பின்னர், மாணவியின் பிரேதப் பரிசோதனை நேற்று கண்டி தேசிய மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version