சினிமா

கீர்த்தி சுரேஷை திட்டிய இயக்குநர்.. அழுத நடிகை.. இப்படியொரு சம்பவம் நடந்ததா!

Published

on

கீர்த்தி சுரேஷை திட்டிய இயக்குநர்.. அழுத நடிகை.. இப்படியொரு சம்பவம் நடந்ததா!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். பேபி ஜான் படத்தின் மூலம் இந்தியில் என்ட்ரி கொடுத்திருந்தாலும், அப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.மேலும் தற்போது இந்தியில் உருவாகியுள்ள ‘அக்கா’ என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் விரைவில் வெளிவரவுள்ளது. கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி என்பவர் திருமணம் செய்துகொண்டார் கீர்த்தி சுரேஷ்.திருமணத்திற்கு பின் பிஸியாக சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது முதல் படத்தில் நடந்த சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.இதில் “எனது மலையாள திரைப்பட பயணம் கீதாஞ்சலி படத்துடன் தொடங்கியது. இந்த படத்தை இயக்கியவர் பிரியதர்ஷன். அப்போது நடந்த ஒரு சம்பவம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஒரு காட்சியை படமாக்கிய பிறகு, அவர் என்னை திட்டிவிட்டார்.என் கண்களில் கண்ணீர் பெருகியது. அது எனது முதல் படம் என்பதால், நான் அழுதேன். அவர் அனைவரையும் ஒரே மாதிரியாகத்தான் பார்ப்பார். அவர் தனது மகள் கல்யாணி பிரியதர்ஷனையும் அப்படிதான் திட்டுவார்” என கூறியுள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version