இலங்கை

ஜனாதிபதி அனுர பக்கம் சாய்ந்தார் சம்பிக்க ரணவக்க

Published

on

ஜனாதிபதி அனுர பக்கம் சாய்ந்தார் சம்பிக்க ரணவக்க

   தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் எதிர்க்கட்சிகள் நடத்தவிருக்கும் பேரணியில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

Advertisement

எதிர்க்கட்சிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுகூடுவது அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

இது ஓர் அநாவசியமான பேரணி.

இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஐந்து ஆண்டு காலத்துக்கு ஆணை வழங்கியுள்ளனர். பேரணிகள், போராட்டங்களினால் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க முடியாது.

Advertisement

அத்துடன், எதிர்க்கட்சிகளிடம் ஒருமித்த கொள்கைத் திட்டம் ஏதும் கிடையாது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதாயின், முதலில் எதிர்க்கட்சிகளிடம் ஏற்றுக்கொள்ளக் கூடிய கொள்கைத் திட்டம் இருத்தல் வேண்டும் என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version