இலங்கை

தமிழர் பகுதியொன்றில் மாடு மேய்க்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published

on

தமிழர் பகுதியொன்றில் மாடு மேய்க்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மட்டக்களப்பு கரடியனாறு கார்மலை பகுதியில் மாடுகள் மேய்க்க சென்ற 55 வயதுடைய பண்ணையார் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இன்று  (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவரே பண்ணையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

குறித்த பண்ணையார் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கார் மலை பகுதிக்கு  காலை  மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதனையடுத்து குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version