இலங்கை

தலாவ பேருந்து விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது!

Published

on

தலாவ பேருந்து விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது!

தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.

 விபத்தில் காயமடைந்த சுமார் 50 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

தலாவவில் இருந்து நொச்சியாகம நோக்கிச் சென்ற தனியார் பேருந்து இன்று (10) பிற்பகல் வீதியில் இருந்து விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

 விபத்து இடம்பெற்ற போது உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பேருந்தில் இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

காயமடைந்தவர்கள் தற்போது அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

Advertisement

 பேருந்து பயணித்த மிகவும் ஒடுங்கிய வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு இடமளிக்க முற்பட்டபோது குறித்த பேருந்து கவிழ்ந்ததாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில், வலயக்கல்வி காரியாலயத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சாதாரண தர கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்ற மாணவர்களும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குகின்றனர்.

விபத்து தொடர்பில் தம்புத்தேகமப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version