இந்தியா

திருப்பதி அடிவாரத்தில் மாமிசம் சாப்பிட்ட கோயில் ஊழியர்கள்: தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கை

Published

on

திருப்பதி அடிவாரத்தில் மாமிசம் சாப்பிட்ட கோயில் ஊழியர்கள்: தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புனித தன்மையை காப்பாற்றும் விதமாக திருமலையில் மது, மாமிசம், புகையிலை, குட்கா போன்றவை பயன்படுத்தவும், விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக அலிபிரி டோல்கேட்டில் பக்தர்களின் உடைமைகள் முழு சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள அலிபிரி பகுதியில், தேவஸ்தானத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 2 ஊழியர்கள் அசைவ உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக திருமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து தேவஸ்தான நிர்வாகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், அலிபிரி அருகே அசைவ உணவு உட்கொண்டதற்காக ராமசாமி மற்றும் சரசம்மா ஆகிய 2 ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவர்கள் இருவர் மீது ஆந்திர பிரதேச அறநிலைய சட்டம் பிரிவு 114-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அலிபிரி விதிகளை மீறி மாம்சம் சாப்பிட்ட புகாரில் நீக்கப்பப்ட்ட ஊழியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் திருமலை ராம்பகிஜா பஸ் நிலைய வளாகத்தில் அவித்த கோழி முட்டைகள் மற்றும் வெஜ் புலாவ் சாப்பிட்டு கொண்டிருந்த  தமிழக பக்தர்கள் சிலரை கண்ட அங்கிருந்த சக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பக்தர்களின் உணவை பறிமுதல் செய்தனர். திருமலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என பக்தர்களை கண்டித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version