சினிமா

நடிகர் பெசன்ட் ரவி பற்றி பலரும் அறிந்திடாத உண்மைகள்… வெளியான சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.!

Published

on

நடிகர் பெசன்ட் ரவி பற்றி பலரும் அறிந்திடாத உண்மைகள்… வெளியான சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.!

தமிழ் திரை உலகில் தனித்துவமான நடிப்பு பாணியால் ரசிகர்களின் மனதில் புதிய இடத்தைப் பிடித்த நடிகர் பெசன்ட் ரவி, சமீபத்தில் கல்வி மற்றும் குடும்பம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இவர் கூறிய கருத்துகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி, புதிய தலைமுறைக்கு பெரும் பாடமாக அமைந்துள்ளது.பெசன்ட் ரவி தனது வாழ்கையில் கல்வியை தொடர முடியாத காரணங்கள் மற்றும் அதன் விளைவுகளைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறியதாவது, “நான் 9ம் வகுப்பு வரை தான் படித்தேன். ஆனா எனக்கு படிக்கணும்னு ரொம்ப ஆசை. வீட்டு கஷ்டத்தால என்னால படிக்க முடியல. நான் தான் படிக்கல, என் பசங்களாவது படிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டன்.” என்றார். இது அவரது வாழ்க்கை அனுபவத்தின் உண்மையான பிரதிபலிப்பாகும். குடும்பச் சிக்கல்கள் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக கல்வி தொடர முடியாத போதும், தனது பிள்ளைகளின் கல்வியை முன்னிலைப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.அவர் மேலும், ” இன்னைக்கு என் பொண்ணு ஸ்டெல்லா மெரீஸ் காலேஜ்ல ப்ரொபஸர் ஆக இருக்கிறாள். என் பையன் ஒரு பெரிய கம்பெனில பெரிய இடத்தில இருக்கான். படிப்பு ரொம்ப முக்கியம். அதனால கண்டிப்பா எல்லாரும் படிங்க..” எனவும் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version