இலங்கை

பனைசார் கைப்பணிப் பயிற்சிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Published

on

பனைசார் கைப்பணிப் பயிற்சிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களில் பனைசார் கைப்பணிப் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, பனை அபிவிருத்தி சபையின் தலைவர் இ. ரவிந்திரன் தலைமையில், மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடைபெற்றது.

பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

Advertisement

சிறப்பு விருந்தினர்களாக: மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ்
இந்நிகழ்வில் ஆறு மாதம் மற்றும் ஒரு வருட கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

மேலும், சில பயனாளிகளுக்கு பனைசார் உற்பத்தியை ஊக்குவிக்க பெறுமதிவாய்ந்த உபகரணங்களும் வழங்கப்பட்டன.

உண்மையின் குரல்: மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1500 மேற்பட்ட குடும்பங்கள் பனைசார் கைப்பணிப் பொருட்கள் மற்றும் பெறுமதி சேர் பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன! 

Advertisement

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பிரதிநிதிகள், பனை அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், சுற்றுலா துறைக்கான மாவட்ட இணைப்பாளர் வணிதா செல்லப்பெருமாள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

                                                                         

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version