சினிமா
பார்வதி மூஞ்சை உடைத்த சபரி.! பேரதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்
பார்வதி மூஞ்சை உடைத்த சபரி.! பேரதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இன்றைய தினம் இடம்பெற்ற கேப்டன்சி பாட்டில் டாஸ்க்கில், விஜே பார்வதியை சபரி தள்ளிவிட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9 சீசன் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஒரு மாதத்தை கடந்துள்ளது. ஆரம்பத்தில் மொத்தமாக 20 பேர் பங்கேற்றனர். அதில் ஏழு பேர் வெளியேறி உள்ளனர். மேலும் உள்ளே நுழைந்த வைல்ட் கார்ட் போட்டியாளர்களால் தற்போது பிக் பாஸ் இல்லம் சூடு பிடித்துள்ளது. அதே நேரம் இறுதியாக எலிமினேட் ஆன துஷார், பிரவீன் வெளியேற்றத்தில் பிரவீனின் வெளியேற்றம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. அரோரா, ரம்யா, கேமி போன்றவர்களை வெளியேற்றாமல், நன்றாக விளையாடிய பிரவீனை வெளியேற்றி இருப்பது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.இந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற கேப்டன்சி டாஸ்கில் பார்வதியை சபரி கீழே தள்ளியுள்ளார். அது மட்டும் இல்லாமல் அவரை ஷூ காலாலும் மிதித்துள்ளார். அதன் பின்பு பார்வதி பாட்டிலை எடுக்க முன்வர, மீண்டும் அவரை சபரி தள்ளி விடுகின்றார். இது ஹவுஸ்மேட்ஸ்க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது பார்வதி வீங்கிய கண்களோடு பிக் பாஸ் வீட்டில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.