சினிமா
மொத்த கதையையும் உளறிய உறவுக்காரர்கள்.! வீட்டாருக்கு முத்து சொன்ன விஷயம்
மொத்த கதையையும் உளறிய உறவுக்காரர்கள்.! வீட்டாருக்கு முத்து சொன்ன விஷயம்
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், க்ரிஷின் உறவுக்காரர்களை முத்து சவாரி ஏற்றிச் செல்கின்றார். செல்லும்போது அவர்கள் மீண்டும் ஊருக்கு கிளம்புவதாக சொல்லுகின்றார்கள். மேலும், தாங்கள் இரண்டு விஷயத்துக்காக தான் வந்தோம். அதில் டிரீட்மென்ட் விஷயம் சரியாகிவிட்டது. ஆனால் எனது அண்ணனின் குழந்தை விஷயம் சரியாகவில்லை என்று சொல்கின்றனர். மேலும், இப்போது தான் எங்களுடைய அண்ணன் குழந்தையை முதல் முறையாக பார்க்க போகின்றோம். அவர்களுக்கு நாங்க செய்த பாவம்தான் எங்களுக்கு குழந்தை இல்லை என்று சொல்லுகின்றார்கள். அதன்படி அவர்கள் கோவிலுக்கு சென்று க்ரிஷையும் அவருடைய பாட்டியையும் பார்க்கின்றார்கள். இதன் போது அங்கு சென்ற முத்துவும், க்ரிஷை பார்த்த சந்தோஷத்தில் விளையாட , அவர்கள் உங்களுக்கு க்ரிஷை ஏற்கனவே தெரியுமா என்று கேட்கின்றனர். மேலும் இதுதான் எங்களுடைய அண்ணன் குழந்தை என்ற உண்மையையும் சொல்லுகின்றார்கள். இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த முத்து, வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த உண்மையை சொல்லுகின்றார். மேலும் க்ரிஷ் விஷயத்தில் ஏதோ மர்மம் இருக்கு என்று சந்தேகப்படுகிறார். இதனால் கோபப்பட்ட ரோகிணி அவருடைய அம்மாவுக்கு போன் பண்ணி திட்டுகின்றார். இதுதான் இன்றைய நாளுக்கான எபிசோட்.