பொழுதுபோக்கு

ராமராஜன்- நளினி மீண்டும் இணைய முடிவா? ஊடகவியலாளர் கூறும் ரகசியம்

Published

on

ராமராஜன்- நளினி மீண்டும் இணைய முடிவா? ஊடகவியலாளர் கூறும் ரகசியம்

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் திருமணம செய்து வைத்த நட்சத்திர ஜோடியான ராமராஜன் – நளினி தம்பதி விவாகரத்து பெற்று 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இவர்கள் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் விளக்கம் அளித்துள்ளார்.1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ராணுவ வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நளினி. தொடர்ந்து உயிருள்ளவரை உஷா, மனைவி சொல்லே மந்திரம், தங்கைக்கோர் கீதம், நூறாவது நாள், நன்றி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜயகாந்த், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நளினி, முன்னணி நடிகையாக உச்சத்தில் இருந்தபோது கடந்த 1987-ம் ஆண்டு நடிகர் ராமராஜனை காதலித்து வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார்.இந்த தம்பதிக்கு அருணா அருண் என்ற இரு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு இருவரும் திருமண வாழக்கையை முறித்துக்கொண்டனர். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நளினி தற்போது காமெடி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் சீரியல்களில், நடித்து வரும் நளினி அவ்வப்போது யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வருகிறார். அதேபோல், கடந்த 2012-ம் ஆண்டு மேதை என்ற படத்தில் நடித்திருந்த ராமராஜன் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் வெளியான சாமானியன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இதனிடையே, விவாகரத்து பெற்று 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ராமராஜன் – நளினி இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கிங் டிவி யூடியூப் சேனலில அளித்த பேட்டியில் கூறுகையில், நளினி கூட, கேரக்டர் நடிகையாக மாறிவிட்டார். ஆனால் ராமராஜன் நடித்தால் ஹீரோதான் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படம் கூட 40 நாட்கள் ஓடியது. இன்றைய காலத்தில் 40 நாட்கள் என்பது பெரிய விஷயம் தான். நளினி – ராமராஜன் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக வெளியான தகவல் உண்மை இல்லை. இவர்கள் இருவரும் இனிமேல் இணைந்து ஒன்றும செய்யப்பேவதில்லை. இவ்வளவு நாட்கள் விட்டுவிட்டு, இப்போது இணைந்தால். இப்போ மட்டும் எதற்காக சேர்ந்தீர்கள் என்ற கேள்வி வரும் அதற்கு இருவருமே பதில் சொல்ல வேண்டும். எதற்காக இப்படி ஒரு நிலை வர வேண்டும், இருவருக்கும் புரிதல் இருக்கிறது. அப்படியே இருந்துவிடுவோம் என்ற நினைக்கிறார்கள். திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டது. இனிமேல் நளினி என்ன சாமியாரா போக போறாங்க. நடிகையாக இருந்துகொண்டு சாமியராக போகிறேன் என்று சொன்னால் அனைவரும் அவரை நடிகையாக தான் பார்ப்பார்கள். சாமியாராக பார்க்க மாட்டார்கள். ராமராஜன் – நளினி இருவருக்கும் நண்பர்களாக இப்போதும் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version