இலங்கை
வத்திக்கான் செயலாளர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடங்களைப் பார்வையிடும் திட்டம் ரத்து!
வத்திக்கான் செயலாளர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடங்களைப் பார்வையிடும் திட்டம் ரத்து!
வத்திக்கானின் அரச உறவுகளுக்கான செயலாளர் போல் ரிச்சட் கல்லாகர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த இடங்களைப் பார்வையிட இருந்த நிலையில் அந்த திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு வருகைத் தந்த போல் ரிச்சட் கல்லாகர் தமது பயணத்தின் இடையில் சுகவீனமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த 3ஆம் திகதியன்று அவர் இலங்கை வந்தநிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் உட்பட்ட தலைவர்களை சந்தித்தார். எனினும் ஏனைய சந்திப்புக்களை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் சுகவீனமடைந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
போல் ரிச்சட் கல்லாகர், தமது பயணத்தின்போது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின்போது பாதிக்கப்பட்ட தேவாலயங்களையும் பார்வையிடத் திட்டமிட்டிருந்ததுடன் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயகர்களையும் அவர் சந்திக்கவிருந்தார்.
இதனையடுத்து, அவரது உடல் நலம் கருதி குறித்த திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.