சினிமா

விஜய்தேவரகொண்டாவை திருமணம் செய்து கொள்வேன்.. ராஷ்மிகா காதலை ஒப்புக்கொண்டாரா?

Published

on

விஜய்தேவரகொண்டாவை திருமணம் செய்து கொள்வேன்.. ராஷ்மிகா காதலை ஒப்புக்கொண்டாரா?

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார்.இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ராஷ்மிகா தற்போது ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் சில தினங்களுக்கு முன் வெளியானது.இந்நிலையில் தன் வருங்கால கணவர் குறித்து ராஷ்மிகா பகிர்ந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” கணவராக வருகிறவர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் என் பக்கத்தில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். சூழ்நிலைகளை புரிந்து கொள்ளும் நல்லவர் ஒருவர் தான் வேண்டும்.என்னுடன் ஒரு போர் நடந்தால் அதில் எனக்கு துணையாக இருப்பவர் தான் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.மேலும், இதுவரை நீங்கள் இணைந்து நடித்த நடிகர்களில் யாரை டேட் செய்வீர்கள்? யாரை திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று ராஷ்மிகாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு, விஜய்தேவரகொண்டாவை காதலித்து அவரை திருமணம் செய்து கொள்வேன்’ என்று கூறியுள்ளார். தற்போது ராஷ்மிகா பேசிய இந்த விஷயம் இவர்கள் காதலை உறுதிப்படுத்துகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version