இலங்கை

ஹெரோயின் கடத்தல் வழக்கு ; விழுங்கிய போதைப்பொருட்களை மலம் கழிக்க வைத்து மீட்பு

Published

on

ஹெரோயின் கடத்தல் வழக்கு ; விழுங்கிய போதைப்பொருட்களை மலம் கழிக்க வைத்து மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் 2040 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்த போது வாயில் விழுங்கிய 28 பக்கற் கொண்ட ஹெரோயின் போதைப்பொருளை சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம் கழிக்க வைத்து மீட்டெடுத்த சம்பவம் சனிக்கிழமை (8) இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது, ஏறாவூர் றகுமானியா வீதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரை சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (7) இரவு கைது செய்யப்பட்டு சனிக்கிழமை (8) எறாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து அன்றைய தினம் மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

சிறைச்சாலைக்கு கொண்டு சென்ற குறித்த நபர் சிறைச்சாலை அதிகாரியிடம் தன்னை கைது செய்யும் போது தன் வசம் இருந்த 28 சிறிய பக்கற்றுக்கள் கொண்ட ஹெரோயினை வாயில் போட்டு விழுங்கி உள்ளதாகவும் இது தொடர்பாக பொலிசாரிடமே எவரிடமும் தெரிவிக்க வில்லை என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபரை சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம் கழிக்க செய்த போது மலத்துடன் வாயில் போட்டு விழுங்கிய 28 பக்கற்றுக்கள் கொண்ட 1960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டனர்.

இதில் சிறையில் அடைக்கப்பட்ட 45 வயதுடைய அவர் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் இவரை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது மீண்டும் இந்த வழக்கிற்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version