இலங்கை
06 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த அம்பாறை நீதிமன்றம்!
06 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த அம்பாறை நீதிமன்றம்!
இரண்டு நபர்களைக் கொன்ற குற்றத்திற்காக அம்பாறை மேல் நீதிமன்றம் 06 சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
சந்தேக நபர்கள் இன்று (10) அம்பாறை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர ஸ்ரீனித் மெண்டிஸ் விஜேசேகர இந்த உத்தரவை பிறப்பித்தார்.
2015 ஏப்ரல் 14 ஆம் திகதி பதியதலாவ கெஹெலுல்ல பகுதியில் இரண்டு நபர்கள் அடித்துக் கொல்லப்பட்டு லொறியால் மோதிய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அம்பாறை மேல் நீதிமன்றம் 06 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை