டி.வி
GAME OVER-னு ஒரு ஸ்டில் தான் ஹைலைட்டே..! பிக் பாஸில் குறும்படம் போட்ட விஜய் சேதுபதி
GAME OVER-னு ஒரு ஸ்டில் தான் ஹைலைட்டே..! பிக் பாஸில் குறும்படம் போட்ட விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தை கடந்துள்ளது. இந்த சீசனின் ஆரம்பத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களை விட அதற்குப் பிறகு வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் வந்த போட்டியாளர்களால் சற்று ஆட்டம் சூடு பிடித்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9 சீசனில் இறுதியாக துஷார் மற்றும் பிரவீன் ஆகியோர் எலிமினேட் ஆகி வெளியேறி இருந்தனர். அதில் பிரவீனின் வெளியேற்றம் பலருக்கு அதிர்ச்சியையும் கவலையும் கொடுத்தது. இதனை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த இரண்டு சீசன்களையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை விஜய் சேதுபதி மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கமல்ஹாசன் போல விஜய் சேதுபதி இல்லை, அவர் போட்டியாளர்களை பேச விடுவதில்லை, அசிங்கப்படுத்துகின்றார் என்று பல விமர்சனங்கள் எழுந்தன.இந்த நிலையில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக நேற்றைய தினம் குறும்படம் போட்டு கட்டப்பட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதி ஹவுஸ்மேட்ஸிடம், நான் தொகுத்து வழங்கும் இரண்டு சீசன்களிலும் முதல்முறையாக குறும்படம் ஒன்று போட்டு காட்ட உள்ளேன். அது என்னவென்று தெரியுமா என்று கேட்க, சாப்பாட்டுப் பிரச்சினையையும் சண்டை பிரச்சனையையும் சொல்லுகின்றார்கள் .ஆனால் அதற்கு பின்பு சாண்ட்ராவுக்கு கொடுக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்க் பற்றி குடும்ப படம் ஒன்றை போட்டு காட்டுகின்றார்கள். இதை பார்த்து அனைவரும் ஷாக் ஆகின்றனர். மேலும் சாண்ட்ரா அந்த நேரத்தில் திவாகரிடமும் வியானாவிடமும் மன்னிப்பு கேட்கின்றார். தற்போது சாண்ட்ரா இந்த வீட்டில் விளையாடிய சீக்ரெட் கேம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிலும் அவர் இறுதியாக கேம் ஓவர் என்று காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்த காட்சி வேற லெவலில் காணப்படுகிறது. தற்போது அவருடைய குறும் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.