இலங்கை
நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!
நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!
அம்பாந்தோட்டை – லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம், நேற்று வியாழக்கிழமை (17) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் திஸ்ஸமஹராமை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஆவார்.
இந்த சிறுவன் மேலும் நான்கு சிறுவர்களுடன் இணைந்து லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து சிறுவனை காப்பாற்றி லுணுகம்வெஹெர மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.