இலங்கை
தேசபந்துவுக்கு பிணை!
தேசபந்துவுக்கு பிணை!
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர் கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன்படி, சந்தேகநபரான தேசபந்து தென்னக்கோனை தலா ஒரு மில்லியன் ரூபா படி இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிவான், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் தடைவிதித்தார்.