இலங்கை
இலங்கை கடலில் தங்கத்துடன் சிக்கிய படகு
இலங்கை கடலில் தங்கத்துடன் சிக்கிய படகு
புத்தளம் – கற்பிட்டி கடற்பரப்பில் சுமார் 4 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனை செய்தனர்.
இதன்போதே 4 கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.